கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படு கொ லை செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை – திவுல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மேற்படி மூதாட்டி, கேகாலை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கேகாலை – திவுல பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணித் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.