வைத்தியர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு காணப்படாத நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற செயற்குழு அவசர கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் நிறைவடைந்து 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் எவ்விதமான சாதகமான தீர்வுகளும் கிடைக்கவில்லை.
தொடர்ந்தும் அரசு தீர்வுகளை வழங்காத நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.