சர்வதேச அரிமா கழகத்தின் 396. b1 கிளையான புலோலி வடமராட்சி கிழக்கு அரிமா கழகங்களின் புதிய நிர்வாக தெரிவும், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நேற்று பிற்பகல் 7:00 மணியளவில் குடத்தனை வடக்கில் அதன் முன்னாள் தலைவர் லயன் வினோதன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். அதனை தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு இடம்பெற்றது. தொடர்ந்து கருத்துரைகளை அரிமா கழக ஆளுநரின் ஆலோசகர் பொன் சீறிபவன், அரிமா கழக பிராந்திய தலைவர் வே.தவச்செல்வம் ஆகியோர் நிகழ்த்தினர். தொடர்ந்து தலைவர், செயலாளர் பொருளாளர் உட்பட்ட நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதே வேளை குடத்தனை, அம்பன், மணல்காடு ஆகிய பகுதிகளில் நூற்றிற்கும் மேற்பட்ட வீதி விளக்குகளை பொருத்திக் கொடுத்தவரும் சுமார் ஒரு கிலோமீட்டர் களிமண் வீதியை தனது சொந்தச் செலவில் அமைத்துக் கொடுத்தவருமான இராமலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் அரிமா கழக நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவிக்கப்பட்டு சிறந்த சமூக சேவையாளராக கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு புலோலி அரிமா கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


