யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை இரவு 8 மணிக்கு இணைய வழியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் வரையான கணக்கு அறிக்கையில் ஒதுக்கிய 56 மில்லியன் ரூபா மற்றும் விசேட வீதி அமைப்புக்கான நிதிகள் என்பவற்றுக்குஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அனுமதியைப் பெறும் நோக்கிலேயே இரவோடு இரவாக இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
ADVERTISEMENT
இந்தக் கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் இணைய வழியில் இணைந்துகொள்வதற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் மாவட்ட செயலகம் மேற்கொள்ளவில்லை.
இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமும் ஏற்கனவே இணைய வழியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.