சிவனொளிபாதமலை யாத்திரைக்கு கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற மூன்று இளைஞர்கள் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தறை, இரத்தினபுரி, கொட்டகலை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நல்லத்தண்ணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.