ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் உன்னதமான கருத்தின்படி, “செல்வம் நிறைந்த நாடு அழகான வாழ்வு” என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்தினால் CLEAN SRI LANKA திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை, கல்வி அமைச்சின் கீழுள்ள 1000 பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி கல்விக்காக சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு இராணுவத்தின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்புப் படைகளின் ஆரம்ப வேலைத்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் 55 ஆவது காலாட்படை பிரிவின் கீழ் உள்ள முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத், மாவட்ட அரசாங்கதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.





