வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் நிர்வாகத் தெரிவானது இன்று (18.02) இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில், இலங்கை சாரணர் சங்கத்தின் உதவி பிரதம ஆணையாளர் கா.அமிதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் தலைவராக ஆசிரியர் வள முகாமையாளர் (புளியங்குளம்) சு.ஜெயச்சந்திரன் அவர்களும், செயலாளராக வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் முகாமையாளர் பூ.சர்மிலன் அவர்களும், பொருளாளராக வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் அவர்களும், உப தலைவராக வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிமனையின் நிர்வாக உதவியாளர் ப.பிறேமதிலக அவர்களும், பதக்க செயலாளராக வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தின் அதிபர் க.ஸ்ரீகந்தவேள் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், நிர்வாக உறுப்பினர்களாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நா.கமலதாசன், மடு வலயத்தில் பிரதி கல்வி பணிப்பாளர் ம.ஜெயரூபன், வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.வீரசிங்கம், உதவி மாவட்ட ஆணையாளர்களான வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிமனையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.சபேசன், வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தின் ஆசிரியர் இ.சந்திரமோகன், வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் ஆசிரியர் சு.காண்டீபன் அவர்களும், சாரண தலைவர்களான வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தின் ஆசிரியர் செ.மயூரி, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியர் பா.மேரிஜெயறூபினி அவர்களும், திரி சாரண தலைவரும், தனியார் நிறுவன உத்தியோகத்தருமாகிய பி.கெர்சோன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


