வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இவ் ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், மாகாண பிரதி விவசாயம் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி, வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி எஸ்.வசீகரன், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி த.ராஜகோபு, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் ந.திருலிங்கநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது சிறுதானியத்தை பயிரிடுவதற்கு ஊக்குவித்தல், கால்நடைகளை கட்டுப்படுத்தல், சட்டவிரோத கிருமிநாசினி பயன்படுத்துவதை தடுத்தல், உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.