வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் கிராம சேகவர்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொருளாதார உத்தியோகத்தர் பணிகளை மேற்கொண்டு இடமாற்றமாகி சென்றவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று(15) இடம்பெற்றது
உடுத்துறை பத்தாம் வட்டார கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வீரகத்தி கணேஸ்வரன் தலைமையில் இன்று பிற்பகல் 11.00 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது
உடுத்துறை கிராமத்தில் சேவையாற்றி இடமாற்றமாகி சென்ற உத்தியோகத்தர்களுக்கு உடுத்துறை கிராமத்தின் பொது அமைப்புகளால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர்,கிராம அலுவலர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,உடுத்துறை பொது அமைப்புக்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

