கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பொலீஸ்மா அதிபர். வர்ண ஜெயசுந்தர இன்று காலை சுப வேளையான முற்பகல் 9 22 மணி அளவில். மட்டக்களப்பு நகரிலுள்ள சிரேஷ்ட. பிரதி பொலீஸ் மாஅதிபர் பணிமனையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை பொலீஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை தளபதியாக கடமையாற்றிய வர்ண ஜெயசுந்தர கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலீஸ் மாஅ திபராக கடமை ற்யேறுள்ளார். இவரது நிர்வாகத்தின் கீழ் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலீஸ் அதியட்சகர் பிரிவுகள். அவரது து கடமை பிரதேசமாக அடங்குகின்றன.
இன்றைய கடமையை ஏற்பின் போது மாகாணத்தில் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலீஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர்கள் உதவி பொலீஸ் அத்தியட்சகர்கள்கள் மற்றும் பொலீஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.
புதிய கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலீஸ்மா அதிபரின் கடமை ஏற்பினை முன்னிட்டு சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபர் அலுவலக வளவில் வரவேற்பு அணிவகுப்பு மரியாதை ஒன்றும் அவரது கடமையை கௌரவித்து நடத்தப்பட்டது.
சுப வேளையான முற்பகல் 9. 22 க்கு கடமை பதிவேட்டில் ஒப்பமிட்டுதனது கடமைகளை சிரேஷ்ட பிரதி பொலீஸ் மாஅதிபர் வருண ஜயசந்திர கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த மாகாணத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலீஸ் மாஅதிபர் அஜித் ரோகண வடமேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபராக கடமை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


