பிடிகல, மெட்டிவிலிய பகுதியில் உள்ள வீதியொன்றில், இன்று வெள்ளிக்கிழமை (14) பலத்த வெட்டுக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
மெட்டிவிலிய சுபாகம வீதியில் வசித்து வந்த திருமணமாகாத 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மெட்டிவிலியவில் உள்ள இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே அவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நபரை தனிநபரொருவர் அல்லது குழுவொன்று ஆயுதங்களால் வெட்டிக் கொ லை செய்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான நீதவான் விசாரணை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளதுடன், பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.