வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில் எவ்வித பாதுகாப்பு சமிக்ஞைகளும் இன்றி நெல்லை உலரவிடுகின்றனர். இதனால். விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் பாதுகாப்பு சமிக்ஞை இல்லாமல் நெல் உலரவிடப்பட்டதனால் கடந்த இரு தினங்களில் இருவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விவசாயிகள் தமது சுயநலத்திற்காக பயணிகளினை கருத்தில் கொள்ளாது இவ்வாறு நடக்கின்றார்கள். இதனால் விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. எனவே அதனை கருத்தில் கொண்டு பொறுப்பான உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் பேசப்பட்டு வீதியில் மூன்றில் ஒரு பகுதியிலேயே நெல் உலர்த்த முடியும் எனவும் இதனை பொலிஸார் கண்காணிப்பு செய்ய வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சிறு வீதிகளிலும், வீதியின் அரைவாசி பகுதிகளிலும் அதற்கு மேற்பட்ட பகுதிகளிலும் நெல் உலரவிடப்பட்டு வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.