வவுனியா வடக்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளுக்கான பதில் திடீர் மரணவிசாரணை அதிகாரியாக லா.சுரேந்திரசேகரன் அவர்கள் வவுனியா மாவட்ட நீதிபதி முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
வவுனியா பிரதேச செயலக பிரிவில் திடீர் மரண விசாரணை அதிகாரியாக செயற்பட்டு வந்த லா.சுரேந்திரசேகரன் அவர்கள் தற்போது கடமையாற்றும் பகுதிக்கு மேலதிகமாக வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வெங்கலசெட்டிகுளம்ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கான பதில் திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர், வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.