குருணாகலை, தோரயாய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ADVERTISEMENT
கதுறுவெலவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்தொன்று தோரயாய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாதுறுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்று குறித்த பேருந்தின்மீது மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.