இடைக்காலக் கணக்கு அறிக்கையில் கிளிநொச்சிக்கே மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதிக்கான கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் செலவுகள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு இடம்பெறும் செலவீனங்களில் இருந்து மாவட்ட அபிவிருத்திக்காகவும் குறிப்பிட்டளவு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள நிதியில் நாடு முழுவதும் ஒதுக்கப்பட்ட நிதியில் கிளிநொச்சி மாவட்டத்துக்கே மிகக் குறைந்தளவு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்துக்கு 13 மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 56 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்குத் தலா 26 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.