நெல்லுக்கான விலை உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்படவில்லை தற்பொழுது நிர்ணயிக்கப்பட்ட விலையும் போதுமானதாக அமையவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர் .
தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடை நிறைவடையும் நிலையில் அரசாங்கத்தினால் நெல்லுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிவப்பு நெல்லுக்கு 120 ரூபாயும் சம்பா நெல்லுக்கு 125 ரூபாவாகவும் கீரிச்சம்பா நெல்லுக்கான விடை 132 ரூபாயாகவும் அரசாங்கத்தில்லால் நிர்ணகிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை நிறைவடைந்து வரும் நிலையில் நெல்லுக்கான விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது மழை வெள்ளத்தில் ஈரமான நெல்லினையே 8000ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடியதாக வயல்களிலே வந்து தனியார் கொள்வனவு செய்கின்றனர். அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நாங்கள் அங்கு கொண்டு சென்று வழங்க வேண்டிய நிலை உள்ளது.
விவசாயிகளாகிய எமக்கு இம்முறை மழை, வெள்ளம் மற்றும் நோய்த் தாக்கம் காரணமாக பாரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு கூட நெல்லை விற்பனை செய்தாலும் எமது நஷ்ட ஈட்டினை மீள பெற முடியாத நிலையில் விவசாயிகள் ஆகிய நாம் பெரும் நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
அத்துடன் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் அரிசியை கொள்வனவு செய்து பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படாத வகையில் 140 ரூபாய் அல்லது 130 ரூபாய் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஓரளவு போதியதாக அமைந்திருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இன்றைய தினம் 05.02.2025 அரசாங்கத்தினால் நெல் களஞ்சியசாலைகள் நெல் கொள்வனவுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



