• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 11, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கடந்தகால ஊடகத்துறை அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்.!

Mathavi by Mathavi
February 5, 2025
in இலங்கை செய்திகள்.
0
கடந்தகால ஊடகத்துறை அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஊடகத்துறையின் மீது மேற்கொள்ப்பட்ட அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு முறையான நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமெனவும், அதேவேளை ஊடகத்துறையின் சுதந்திரமும், சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05.02.2025) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே காலத்திற்குகாலம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகத்துறை நசுக்கப்படுகின்ற அவல நிலையே தொடர்கின்றது.

அந்தவகையில் கடந்த போர்க் காலப்பகுதியில் பல ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் படு கொ லை செய்யப்பட்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் பலர் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்களும் ஊடகப்பணியாளர்களும் இந்த நாட்டில் தமக்கு இருந்த அச்சுறுத்தல் நிலைகளால் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனைவிட ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக தராகி சிவராம், மயில்வாகனம் நிமலராஜன், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், ஐயாத்துரை நடேசன், லசந்த விக்கிரமதுங்க போன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதை உதாரணமாகச் சொல்லமுடியும்.

அதேவேளை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் உதயன் பத்திரிகை நிறுவனம், சிரச ஊடக வலையமைப்பின் தெபானாம கலையகம் என்பன கடந்த காலங்களில் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி ஹோமாகம நகரில் பிரகீத் எக்னெலிகொட என்ற ஊடகவியலாளர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். வடக்குக் கிழக்கில் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் உறவுகளைப் போலவே அவரது குடும்பமும், கடந்த ஒன்றரைத் தசாப்தகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதிகேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந் நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைவாகவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தன்னை முன்னாள் கடற்படைவீரர் என அடையாளப்படுத்தும் ஆர்.பி.டி.பி.பிரசன்ன பியசாந்த என்பவர் அண்மையில் சுதா கிரியேசன்ஸ் எனும் யூடியூப் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதனை ஆராயுங்கள்.

இந் நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு இதுதொடர்பில் அவரது குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை போருக்குப் பின்பு, தற்போதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற, அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

தற்போது ஊடகவியலாளர்கள் பொலிஸார், புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் நபர்கள் எனப் பல்வேறு தரப்புக்களாலும் அச்சுறுத்தப்படும் நிலைமைகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த 2024.12.26 வியாழக்கிழமையன்று கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன் என்னும் ஊடகவியலாளரை, கிளிநொச்சி ஏ(9) வீதியில் வைத்து வாகனத்தில் வந்தவர்கள் கடத்த முற்பட்டுள்ளனர். கடத்தல் முயற்சி கைகூடாமல்போகவே அவரைக் கடுமையாக தாக்கியதுடன் எச்சரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.

அதேவேளை அண்மையில் ஊழல்மோசடிதொடர்பில் செய்தி வெளியிட்டமைக்காக கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஊழல்மோசடியுடன் தொடர்புடைய குழுவினால் அவருடைய வீட்டு நுழைவாயில் சேதப்படுத்தப்பட்டதுடன், மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஜனவரி மாதத்திலேயே கூடுதலாக ஊடகவியலாளர்களுக்கு பல குற்றங்கள் இழைக்கப்பட்டன.

இந் நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி.31ஆம் திகதியில் கறுப்பு ஜனவரி தினம் ஊடகவியலாளர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இம்முறையும் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஜனவரி என்பது ஊடகவியலாளர்கள் விடயத்தில் இன்னமும் கறுப்பாகவே உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மரக் கடத்தல்கள் இடம்பெறுவதாக பலரும் சுட்டிக்காடியபோது செய்தி சேகரிக்கச்சென்ற கணபதிப்பிள்ளை குமணன், சண்முகம் தவசீலன் ஆகிய ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டனர்.

பிறிதொருதடவை முல்லைத்தீவு ஊடக அமையத்தினுள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாதவர்கள், ஊடக அமையத்தின் செயற்பாடுகள் குறித்து கடுமையாக விசாரித்துள்ளனர். இத்தோடு முல்லைத்தீவு குருந்தூர்மலையில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிசாரால் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டிருந்தார். இப்படியாகப் பல சம்பவங்கள் உள்ளன. அனைத்தையும் சொல்வதற்கு நேரம்போதாது வவுனியா, மன்னாரிலும் ஊடகவியலாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுள்ளனர்.

தயவுசெய்து புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் வலிகளை உணர்ந்தவர்கள். ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும், அவர்களின் சுயாதீனத்தன்மையையும் உறுதிப்படுத்தவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Related Posts

பௌத்த பீடாதிபதிகளுக்கு அஞ்சி சட்டத்தை மீறுகின்றதா பொலிஸ்?

பௌத்த பீடாதிபதிகளுக்கு அஞ்சி சட்டத்தை மீறுகின்றதா பொலிஸ்?

by Bharathy
May 11, 2026
0

"பொலிஸார் பௌத்த பீடாதிபதிகளுக்கு அஞ்சி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களைத் தடுத்து சட்ட மீறல்களுக்குத் துணை போகின்றனர்" என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். தையிட்டி விகாரை...

தையிட்டி வீதி விவகாரம்; மே 21 ஆம் திகதி தீர்ப்பு.!

தையிட்டி வீதி விவகாரம்; மே 21 ஆம் திகதி தீர்ப்பு.!

by Mathavi
May 11, 2026
0

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும்...

நான்கு மாதங்களின் பின் ‘யாழ் தேவி’ வருகை.!

நான்கு மாதங்களின் பின் ‘யாழ் தேவி’ வருகை.!

by Mathavi
May 11, 2026
0

காலநிலை அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு, கோட்டை - காங்கேசன்துறை இடையிலான 'யாழ் தேவி' ரயில் சேவை, நான்கு மாத இடைவேளைக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முதல்...

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.!

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.!

by Mathavi
May 11, 2026
0

இரத்தினபுரி - பெல்மதுல்ல வீதியின் வெலிஹந்த பிரதேசத்தில் உள்ள இரட்டை வளைவுப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பாரிய வாகனம்...

யாழ். மலசலகூட விவகாரம் குறித்து இருதரப்பும் இணைந்து பேசி தீர்வைக் காண முன்வரவேண்டும்.!

யாழ். மலசலகூட விவகாரம் குறித்து இருதரப்பும் இணைந்து பேசி தீர்வைக் காண முன்வரவேண்டும்.!

by Mathavi
May 11, 2026
0

மக்களின் அவசிய தேவை கருதி யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில் யாழ் மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே...

உந்துருளியில் தலைக்கவசம் இன்றி பயணம்; சிக்கிய பெண்கள்.!

உந்துருளியில் தலைக்கவசம் இன்றி பயணம்; சிக்கிய பெண்கள்.!

by Mathavi
May 11, 2026
0

உந்துருளி ஒன்றில் தலைக்கவசம் இன்றி, ஆபத்தான முறையில் மூன்று யுவதிகள் பயணிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, நான்கு பெண்களை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர். வீதியில்...

மன்னாரில் அமைக்கப்படும் கடலோரப் பூங்காவை பார்வையிட்ட வடமாகாண சுற்றுலா அதிகார சபை தலைவர்.!

மன்னாரில் அமைக்கப்படும் கடலோரப் பூங்காவை பார்வையிட்ட வடமாகாண சுற்றுலா அதிகார சபை தலைவர்.!

by Mathavi
May 11, 2026
0

மன்னார் நகரசபையின் மேற்பார்வையில், மன்னார் நுழைவாயில் பாலத்திற்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடலோரப் பூங்காவின் (Coastal Park) முதற்கட்டப் பணிகளை வடமாகாண சுற்றுலா அதிகார சபையின்...

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.!

by Mathavi
May 11, 2026
0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு வீதியின்...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு.!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு.!

by Mathavi
May 11, 2026
0

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. டித்வா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட...

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது.!

by Mathavi
May 11, 2026
0

நாட்டின் இருவேறு பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு - தலுபொத்த பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி