கடந்த 17 நாட்களாக காணாமல் போயுள்ள இளைஞன் ஒருவனை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
மஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான பொல்வத்த கொல்லாகே நவோத் கிம்ஹான் எனும் இளைஞரே காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போன இளைஞனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
காணாமல்போன இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் 071 – 8591691 அல்லது 071 – 8594360 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.