பொலிஸார், விசேஷட அதிரடிப்படையினர், பொதுமக்கள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (01.02.2025) இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாடுகள் நிலவிவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், பாெதுமக்கள் இணைந்து நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் வழங்கியிருந்தார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 10 பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸாரும் , விஷேட அதிரடி படையினர், மற்றும் பொதுமக்கள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் சசினி விஜயரத்ன தலைமையில்
இரத்தத்தை அவசர தேவையின் நிமிர்த்தம் வழங்கியிருந்தனர்.
முல்லைத்தீவு கிளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த இரத்ததானம் வழங்கும் நிகழ்விற்கு தேவையான சிற்றுண்டிகளை முல்லைத்தீவு மாவட்ட வனவள திணைக்களத்தினர் வழங்கி இருந்தனர்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு தொடர்ச்சியாக இருப்பதாகவும் இதனை நிவர்த்தி செய்ய அனைவரும் ஆதரவு தருமாறு இரத்த வங்கியின் வைத்தியர் தெரிவித்துள்ளார்.


