வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இன்று திருத்தப் பணிகளை முன்னெடுத்து வந்த ஊழியர் ஒருவர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சத்துரங்க ஹேரத் என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


