குஜராத்தில் சொகுசு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 17 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மஹாராஷ்டிராவின் திரிம்பகேஷ்வரில் இருந்து குஜராத்தின் துவாரகாவுக்கு யாத்ரீகர்கள் 48 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நாசிக்-குஜராத் நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்புச் சுவரை உடைத்து, 35 அடி ஆழ பள்ளத்தாக்கில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தின் போது இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.