தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா நிகழ்வானது பெருந் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் வட்டகொட பிரஜா சக்தி நிலையம் மற்றும் பிரஜாசக்தி நலன்புரி சங்கம் -ஹட்டன் நுவரெலியா பிராந்தியம் ஏற்பாட்டில் 26.01.2025 அன்று மடக்கும்பர வடக்கு தோட்ட விளையாட்டு மைதானத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக திரு U.P.M.R. உடுகம(பிரதம ஆய்வாளர் தலவாக்கலை பொலிஸ் நிலையம்), விசேட அதிதிகளாக திரு S.பிரதாப் அதிபர்(வடக்கு மடக்கும்பர த.வி), திரு.S.செலியன் உப அதிபர் (வட்டகொட த.ம.வி), திருமதி எனிட்டா(DO) பிரஜா சக்தி செயற்திட்டம் மற்றும் திரு.M.சபித் (APC- HN) பிரஜா சக்தி செயற்திட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழ் தாய் வாழ்த்து, கிராமியநடனம், பரத நாட்டியம், கோலப் போட்டி, பொங்கல் வைக்கும் போட்டிகள் என்பன இடம்பெற்றது. நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் பிரஜா சக்தி உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள், கலைஞர்கள், உள்ளிட்ட பலரும் பற்கேற்றிருந்தனர்.







