• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.!

Mathavi by Mathavi
January 22, 2025
in இலங்கை செய்திகள்.
0
மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

கல்முனை நீலாவணையிலே மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

கிளீன் சிறீலங்கா தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,

விசேடமாக க்ளீன் ஸ்ரீலங்காவின் ஊடாக இந்த நாட்டை சிறப்பாக நடத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்னாலான அனைத்து ஒத்துழைப்பையும் நான் வழங்குவதற்கு தயாராக இருப்பதோடு, இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, நீலாவணை பொதுமக்கள் ஒன்றுகூடி கிட்டத்தட்ட 500 பேருக்கு மேற்பட்டவர்கள் மதுபானசாலையை ஒழிப்பதற்காக க்ளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒரு முன்னேற்பாடாக அந்த இடத்திலேயே மக்கள் விசேடமாக நீலாவனையிலே அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மதுபானசாலை அந்த இடத்திலே அமைக்கப்படும் என்றால் அங்கே இருக்கின்ற பாடசாலை மாணவர்கள், அதேபோல் அங்கே உழைத்து அன்றாடக் கூலி வேலை செய்கின்ற வர்க்கத்தினர் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்ற சூழ்நிலை, சந்தர்ப்பம் ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு.

அதேபோல், இளம் மாணவர்கள் பாதிப்படைகின்றார்கள். இதை நீங்கள் ஏதோ ஒருவகையில் உங்களது சட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தைக் கொண்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த 3 மாதத்துக்கு முன் நீலாவணையிலே அந்த மதுபானசாலை திறக்கப்பட்டிருந்தது. மக்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மக்கள் எதிர்ப்பு செய்ததன் காரணமாக அது மூடப்பட்டிருந்தது ஆனால் தற்பொழுது அதனை திறப்பதற்காக அந்த kegalle Beverage லிமிடெட் என்ற மதுபானசாலை கம்பெனியானது, திறப்பதற்காக அதன் முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, அந்த மக்கள் மதுபானசாலையை இல்லாமல் செய்வதற்காக கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலே ஆர்ப்பாட்டம் செய்கின்ற நிலையில், அவர்களுக்குரிய ஒத்துழைப்பை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும்.

ஏனென்றால் இந்த அரசு வருகின்ற பொழுது மதுபான சாலைகளுக்கு கொடுத்த அனுமதிப்பத்திரத்தை நாங்கள் ஒழிப்போம், மதுபானசாலைகளை இல்லாமல் செய்வோம் என்று சொல்லிவிட்டு வந்த பின்பு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இன்று மதுபானசாலையை அமைப்பதற்கான நடவடிக்கை அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆகவே இதனைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமைப்பாடு உங்களுக்குள்ளது. ஏனென்றால் பொருளாதாரத்திலே பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்துகின்றது. மாணவர்கள் பாதிப்புக்குள்ளாக நேரிடுகின்றது. அதேபோல் அன்றாடக் கூலித் தொழில்கள் செய்கின்றவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தென் பகுதியிலே இருக்கின்ற மதுபானசாலை உரிமை பத்திரத்தில் இருக்கின்றவர்கள் கல்முனை பிரதேசத்திலே வந்து மதுபானசாலை அமைப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீங்கள் பழைய ஆட்சிக்காலத்திலே செய்யப்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்வதற்காகத்தான் உங்களுக்கு மக்கள் 159 பிரதிநிதித்துவ ஆணையை தந்திருக்கிறார்கள்.

விசேடமாக எமது மக்கள் உங்களுக்காகத்தான் கூடுதலான வாக்குகளை அளித்தார்கள். ஆனால் தற்போது ஏமாற்றத்தை சந்தித்த வண்ணம் இருக்கின்றார்கள்.

மேலும் ஆலயடிவேம்பு பிரதேசத்தில் இருக்கின்ற பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான இரண்டு காணிகள், மட்டுமல்ல, 100X40 அளவிலான இரண்டு கட்டடங்களில் 2020ஆம் ஆண்டு முகத்துவாரத்திலே இருக்கின்ற இலங்கை தரைப்படையானது, இயக்குனர் சபையினதும் பொதுச் சபையினதும் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அந்த காணிகளையும், கட்டடத்தையும் அபகரித்தார்கள்.

கிட்டத்தட்ட 1969ஆம் ஆண்டில் இருந்து அதனை பல் நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர் பராமரித்து வந்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கூட்ட தீர்மானத்தின் ஊடாக பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து இருக்கிறார்கள். அதேபோல் 1991ஆம் ஆண்டு நெல் கொள்வனவு செய்து சுத்திகரிப்பதற்காக
இயந்திர உபகரணங்களை அமைத்திருந்தார்கள். ஆனால் அனைத்தையும் இல்லாமல் செய்துவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலே படையினர் அந்த காணியை அபகரித்து இருப்பது உண்மையாக கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

அந்தக் காணி ஆலயடி வேம்பு பொதுமக்களுக்குரிய சொத்து பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குரிய சொத்து அவர்களுடைய சந்தா பணத்திலிருந்து வந்த சொத்து. அதுமட்டுமல்ல, அவர்கள் நெல்லை கொள்வனவு செய்து குறைந்த கட்டுப்பாட்டு விலையிலே
அரிசியினை அரசாங்க அதிபர், அதே போல் பிரதேச செயலாளர், கூட்டுறவு ஆணையாளர் என்போரின் அனுமதியோடு பொதுமக்களுக்காக அதை விநியோகித்திருந்தார்கள்.

ஆனால் 2023 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக அதை எடுத்திருக்கிறார்கள். ஆனால் 2010 ஆம் ஆண்டு தரைப்படையின் தலைமையலுவலகமானது அந்தக் காணியை கொடுக்கும்படி இராணுவ தலைமையகத்துக்கு தகவல் அனுப்பியிருந்தது. அதேபோல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அந்த அறிவுறுத்தலை விடுத்திருந்தார்.

அது மட்டுமல்ல இராணுவ கட்டளைத் தளபதி கூட அதனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குக்கு திருப்பி வழங்கியிருந்தார்.

எனவேதான், இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அதனை மக்கள் செயற்பாட்டிற்காக மீண்டும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

Related Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

by selvan
May 21, 2026
0

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழுவிற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன தலைமையில்...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

by selvan
May 21, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய  வருடாந்த மகோற்சவ பெருவிழா  இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இன்றைய தினம் (21) காலை   உற்சவ மூர்த்திகளுக்கு ...

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

by selvan
May 21, 2026
0

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது விவகாரம் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்கரிய கருத்துக்கள், அந்த வழக்கோடு தொடர்புடைய 15 வயது சிறுமியை நோக்கமாகக் கொண்டவை அல்ல என...

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

by selvan
May 21, 2026
0

தமிழ் மக்களாயினும் சரி, சிங்கள மக்களாயினும் சரி, ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

by Mathavi
May 21, 2026
0

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள...

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பொன்னி சம்பா மற்றும் பால்பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வர்க்கங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி...

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

by Mathavi
May 21, 2026
0

நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி