11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த இடமாற்றம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.