தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தையல் பயிற்சி கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சி நிகழ்வும் இன்று (01)புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள கட்டிடத்தில் இடம்பெற்றது.
இன்றைய தினம் (01/01/2025) தம்பலகாமம் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் 2025 கற்கைநெறி செயற்பாடுகள். 2024 மாணவர்களின் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் 2022 மாணவர்களின் கற்கை நெறியை பூரணப்படுத்தியமைக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பல தையல் உற்பத்தி ஆடைகள் கைப்பணி அலங்கார பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி, உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். பர்கானா, புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரேம்குமார், புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் சுதர்சனி, பெற்றோர் நலன் விரும்பிகள் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தையல் போதனாசிரியர் என பலரும் கலந்து கொண்டனர்.