வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்களுக்கு, மக்கள் சீன குடியரசினால் வழங்கப்பட்ட, நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(29), மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.சீன அரசாங்கத்தின் சகோதர பாசம் என்ற தொனிப் பொருளின் கீழ், இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக இன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா, மூதூர் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களுக்கு 700 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதனை, மக்கள் சீன குடியரசின் இலங்கைக்கான தூதுவர் H. E. கிய் சேன்ஹொங் (H. E. Qi Zhenhong) பிரதமாக அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் , பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் மதிவண்ணன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி, மூதூர் பிரதேச செயலாளர், தம்பலாகமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி , குச்சவெளி மற்றும் சேருவில உதவிப் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.