காலி உனவடுன சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் துஷ் பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உனவடுன சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விடுதியில் தங்கியிருந்த நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் தங்கியிருந்த அறைக்கு அருகில் ஆண் ஒருவர் நிர்வாணமாக வந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக இந்த ரஷ்ய பெண் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று சனிக்கிழமை (28) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக...
வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித...
நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!
கண்டி நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இம்புல்பிட்டிய உச்சியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மரம் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று...
வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக இன்று 12.06.2026 கிளிநொச்சி பரந்தன் பொதுச்சந்தையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாலை மரம் முறிந்து வீழ்ந்தமையால் வர்த்தக நிலையம்...
அநுர அரசால் நாடு வீழ்ச்சிப் பாதையில்.!
தற்போதைய அரசின் செயற்திறனற்ற தன்மையினாலும், அனுபவமின்மையினாலும் நாடு மிக வேகமாக வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நாட்டின்...
கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் உயிரிழப்பு.!
இலங்கையில் நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கியமையால் 122 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத்...
அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!
அரசின் மீதான மக்களின் நம்பிக்கை முற்றிலும் இழக்கப்பட்டு, அவநம்பிக்கையே மேலோங்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு...
சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!
பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்று பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்....
ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது.!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு.!
மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (12) வெள்ளிக்கிழமை...










