யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் அனாதராக உந்துருளி ஒன்று காணப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ADVERTISEMENT
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சத்தம் ஒன்று கேட்டுள்ளதாகவும் திருடன் என அயலில் உள்ள மக்கள் வீடுகளுக்குள்ளேயே அச்சத்துடன் இருந்திருக்கிறார்கள். விடிந்ததும் வெளியே வந்துபார்த்தபோது உந்துருளி ஒன்று காணப்பட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது மாதா சுருவத்தோடு மோதிய நிலையில் உந்துருளி காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அயலர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக சென்ற பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

