மாணவர்கள் சிலர் பயணித்த படகொன்று செல்லக்கதிர்காமம் இருபது ஏக்கர் வாவியில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் செல்லகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
குறித்த படகில் ஐந்து மாணவர்கள் பயணித்துள்ளதாகவும், படகு கவிழ்ந்ததை அடுத்து பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே ஒருவர் உயிரிழந்துள்ளார்.