நிலவர அறிக்கை (29.11.2024 – நண்பகல் 12.00 மணி வரையிலானது)
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய (29.11.2024) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி 20,732 குடும்பங்களைச் சேர்ந்த 69,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
04 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. 178 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் 79 பாதுகாப்பு நிலையங்களில் 2,136 குடும்பங்களைச் சேர்ந்த 7,342 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


