யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய (27.11.2024) பி. ப 03.00 மணி நிலவரப்படி 8,460 குடும்பங்களைச் சேர்ந்த 29,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 103 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 40 பாதுகாப்பு நிலையங்களில் 831 குடும்பங்களைச் சேர்ந்த 2,883 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் பாரதியின் மறைவு தமிழ் ஊடக உலகிற்கு பேரிழப்பு!
அச்சு ஊடகத் துறையில் ஆழமான தடங்களை பதித்த சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் அவர்களின் மறைவு, தமிழ் ஊடகத் துறைக்கு பாரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாக ஈழ...