பலாங்கொடை – தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், பலாங்கொட – தம்மானையை சேர்ந்த 44 வயதுடைய மிகஹவெல லெக்மிலகே விஜேகுமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இறந்தவரின் வீட்டுக்கு அவரது மனைவியின் தாயும் தந்தையும் வந்திருந்தனர். அப்போது மனைவிக்கும், குறித்த நபருக்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டின் வரவேற்பறையில் வைத்து மனைவியின் தந்தை குறித்த நபரை தாக்கியுள்ளார். இதன் போது அவரது தலையில் அடிபட்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரை தாக்கிய 65 வயதுடைய சந்தேக நபரான மாமாவை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Related Posts
வடக்கு மாகாண பெண் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள பாடசாலை மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்
மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்/வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளான ஆர்.மேரி தயானா மற்றும் எஸ். தமிழினி ஆகிய இரு மாணவிகளும்...
வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் காணி பங்கீடுகள் அமைய வேண்டும்.!
சிறுபோக நெற்செய்கைக்காக அரச காணிகளை பங்கீடு செய்யும் போது, வறுமை நிலையில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அப்பங்கீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி ஆரம்பம்.!
இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி' இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தமிழ்த்...
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு; தலையில் கை வைத்த சுமந்திரன்.!
தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த...
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!
மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பிரதி...
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...
எயார்பஸ் மோசடி விவகாரம்; இரண்டரை மணிநேரம் மஹிந்தவிடம் தீவிர விசாரணை.!
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. சுமார் இண்டரை மணிநேர...
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கல்.!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (12) மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார்...
ஹட்டனில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தினம்.!
இன்று 12 ஆம் திகதி காலை ஹட்டனில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. உலக செவிலியர் சேவையின் நிறுவனரான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளுடன் ஒத்துப்போகும் சர்வதேச செவிலியர்...
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாக பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத்...










