ஜனாதிபதி தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் தோற்றியிருந்தனர். தேசிய ஜனநாயக முன்னணியின் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா சமாஜ்வாதி கட்சியின் மஹிந்த தேவகே, சுயேச்சை வேட்பாளர் பிரேமசிறிமானகே மற்றும் கே ஆனந்த குலரத்ன ஆகியோர் தமது செலவு அறிக்கைகளை வழங்கிய நான்கு வேட்பாளர்களில் அடங்குவர்.
தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, அவற்றைச் சமர்ப்பிக்க வரும் 13ஆம் திகதி கடைசி நாள் என்றும், அதன்பின் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளுக்கு சட்டவிரோதக் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Related Posts
அநுர அரசின் பயணம் சிறப்பு.!
"இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததைவிட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது." - இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய தினம் (12.11.2025) பிரதேச...
அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!
"தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (12)...
இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!
'தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்'...
சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!
'சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது' என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல்...
போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!
யாழ்ப்பாணம், சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து...
சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!
"இலங்கையில் பொறுப்புக்கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம், சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம்" என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார். கடந்த...
வவுனியா – பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை உடன் தவிர்க்கவும்!
பேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைத் தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு...
போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபடவில்லையாம்!
"வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என பாதுகாப்பு பிரதி அமைச்சர்...
மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சமகாலத்தில் சந்தித்து வருகின்றது. அதனால் 7 ஆயிரம் கரையோர குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள்....










