• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் !

User1 by User1
September 15, 2024
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் !
Share on FacebookShare on Twitter

தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் அணி திரள்வோம்!

பேரன்புமிக்க தமிழ் மக்களிற்கு வணக்கம்,

நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம்.

ADVERTISEMENT

தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும்

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன. 

தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் (புநழெஉனைந) குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம்.

எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்!

சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக?

தமிழர் தேசமாய்த் திரள்வோம் !

தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது.

தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர் !

தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர்.

இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம்.

நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு,  அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம். 

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்! இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!!!

உரிமைகளுடன் கோரி நிற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம்

User1

User1

Related Posts

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

by Mathavi
May 24, 2025
0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று நேற்று மாலை கடுமையான காற்றினால்...

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 24, 2025
0

நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று அதிகாலை( 24) நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் உள்ள டொப் பாஸ் (Top Pass)...

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 23, 2025
0

பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சங்கானை பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணகுமார் (வயது 63) என்ற இரண்டு பிள்ளைகளின்...

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 23, 2025
0

யாழில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந்தன் (வயது...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது..!

by Thamil
May 23, 2025
0

ஐஸ், கேரளா கஞ்சா, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போன்ற போதைப்பொருட்களுடன் 42 பேர் காத்தான்குடி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்....

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

அம்பாறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

by Thamil
May 23, 2025
0

அம்பாறை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை நகரில் இன்று (23) 40 கொகைன் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் நடமாடிய சந்தேக நபரை...

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

விபத்துக்குள்ளான பசில் ராஜபக்‌ஷ ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

by Thamil
May 23, 2025
0

அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும் நரம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக...

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

நல்லூரடியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் அதிரடி முடிவு..!

by Thamil
May 23, 2025
0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியதையடுத்து தற்போது சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய உணவக நிர்வாகம்...

யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

by Thamil
May 23, 2025
0

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் இன்றைய தினம் (23) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின்...

Load More
Next Post
சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் – நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!

சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் - நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!

கந்தளாய் சோழீசுவரம் சிவன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில்  பா.உ.ச.குகதாசன்

கந்தளாய் சோழீசுவரம் சிவன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பா.உ.ச.குகதாசன்

வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை மற்றும் இளைஞரால் துஸ்பிரயோகம் 

வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை மற்றும் இளைஞரால் துஸ்பிரயோகம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி