• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல் – யுனஸ்கோ மற்றும் சர்தேச மன்னிப்புச் சபைக்கு தீபச்செல்வன் கடிதம்

admin by admin
August 17, 2024
in இந்திய செய்திகள், யாழ் செய்திகள்
0
இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல் – யுனஸ்கோ மற்றும் சர்தேச மன்னிப்புச் சபைக்கு தீபச்செல்வன் கடிதம்
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவுவெளிப்பாடுமீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறும்  யுனஸ்கோ மற்றும் சர்தேச மன்னிப்புச் சபையிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளார். 

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் ஆகியோருக்கு இலங்கை எழுத்தாளர் தீபச்செல்வன் கடிதங்களை எழுதியுள்ளார். 

இக் கடிதங்களின் பிரதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஆகியோரிடம் கையளித்தார். 

அக் கடிதங்ககளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“நான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளன். கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட நான், போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகக் கல்வியை முடித்து தற்போது ஒரு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.

போர் நடைபெற்ற காலத்தில் அதன் விளைவாக நான் ஒரு எழுத்தாளனாக வெளிப்பட்டேன். போரின் துயரங்களையும் போரில் என்னைச் சார்ந்த சமூகம் எதிர்கொள்ளும் உரிமை மறுப்புக்களையும் எழுத உந்தப்பட்டேன்.

புகழ், வருமானம் போன்ற நோக்கங்கள் இல்லாமல் மனித உயிர்கள் அழிக்கப்பட்டும் எனது தேசத்தில் இல்லாமல் ஆக்கப்படுபவர்களின் மனசாட்சியாய் இறுதிக்குரலாய் என் எழுத்துகள் வெளிப்பட்டன.

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்பது 2008ஆம் ஆண்டில் வெளியான என் முதல் கவிதை நூல். உரிமைக்கான போராட்டத்தில் தன் பிள்ளையை இழந்த தாய் அவன் நினைவுகளுக்காக முன்னெடுக்கும் வாழ்வையும் போராட்டத்தையும் பேசுவது நடுகல் என்ற என் முதல் நாவல்.

போரில் தாய் தந்தையை இழந்து தப்பும் ஒரு குழந்தை எந்தச் சூழலிலும் கல்வியைக் கைவிடாது பல்கலைக்கழகம் சென்று அங்கு மாணவத் தலைவராகிய நிலையில் அரச படைகளால் அவன் கொல்லப்படும் கதையைப் பேசுவது பயங்கரவாதி என்ற என் இரண்டாவது நாவல்.

பயங்கரவாதி என்ற எனது இரண்டாவது நாவல், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்கிறதா என்ற கோணத்தில் இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்னிடம் கடந்த ஜூன் மாதம் விசாரணையை மேற்கொண்டது.

சுமார் இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதற்கு முன்பு நான் தலைமை தாங்கி நடாத்திய ஒரு புத்தக வெளியீட்டிற்காகவும் மூன்று மணிநேரம் விசாரணையை பயங்கரவாத தடுப்ப்ப் பிரிவு மேற்கொண்டது.

என் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையானவையா? பிரதான கதாபாத்திரமாக வரும் மாறன் என்பவர் யார்? அவர் எங்குள்ளார் என விசாரணை நடாத்தப்பட்டது.

இலங்கையில் கடந்த காலத்தில் பல எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தின்மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை என்னையும் என் குடும்பத்தினரையும் மாத்திரமின்றி என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த மேலாதிக்கத்திற்கான போர் மற்றும் உரிமைக்கான போராட்டத்தில் சந்தித்த இழப்புக்கள், தியாகங்கள், அனுபவங்கள் குறித்து இலக்கியங்கள் எழுதுவது இந்த தீவின் எதிர்கால அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் அவசியமானது.

உலகின் எந்தவொரு தேசத்திலும் எழும் படைப்புக்களும் இலக்கியங்களும் உலக மக்கள் அனைவருக்குமான அறிவு மற்றும் படைப்பாக்கச் சொத்தாகும்.

அந்த வகையில் வரலாற்றினதும் கடந்த கால கசப்பக்களினதும் விளைவாக எழும் இலக்கியங்களை தடுக்க முற்படுவது அறிவுவெளிப்பாடுமீதான ஒடுக்குமுறையுமாகும்.

பொருளாதார நெருக்கடி போன்ற சூழலிலும் தமிழ் சிறுபான்மை எழுத்தாளர்கள்மீது  அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இத்தகைய செயற்பாடுகளை தடுக்க தாங்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கைத் தீவின் கலாசார பண்பாட்டு மற்றும் படைப்புக்கள்மீது மிகுந்த மதிப்பும் கரிசனையும் கொண்டுள்ள தங்களின் கவனம் இலங்கைத் தீவில் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதுடன் தமிழ் பேசும் மக்களின் இருப்பையும் சுதந்திரத்தையும் காத்து நிற்கும் என்றும் எதிர்பார்த்து வேண்டி நிற்கின்றேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15.06.2026) வடக்கு மாகாண...

குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

by Mathavi
June 15, 2026
0

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண...

விசேட  BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

விசேட  BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

by selvan
June 15, 2026
0

கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence – BMD) ரக ஏவுகணை...

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

by selvan
June 15, 2026
0

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக...

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மீனவர்கள்.!

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மீனவர்கள்.!

by Mathavi
June 15, 2026
0

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று...

சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும்...

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
June 15, 2026
0

போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர்...

சொந்த மண்ணில் மீள்குடியேறக் கோரி இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.!

சொந்த மண்ணில் மீள்குடியேறக் கோரி இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன....

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தத் தடை!

by selvan
June 15, 2026
0

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி...

வடமாகாண கரம் போட்டியில் வேலணை மத்தியின் மாணவி விதுர்ஷினி சம்பியன்.!

வடமாகாண கரம் போட்டியில் வேலணை மத்தியின் மாணவி விதுர்ஷினி சம்பியன்.!

by Mathavi
June 14, 2026
0

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி