(படங்கள் இணைப்பு)
ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையில் தமிழ் பொது வேட்பாளர் வாய்ப்புக்களும் வகிபாகங்களும் என்ற தலைப்பில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
சட்டத்தரணி விஜயராணி சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை போராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான ம.நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்ட மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் சார்ந்தோர், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
உரைகள்
1)ம.நிலாந்தன்
அரசியல் ஆய்வாளர்
2)யதீந்திரா
அரசியல் ஆய்வாளர்
3)யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை போராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்
தமிழ் பொது வேட்பாளரின் தேவைகள் தொடர்பாக உரையாற்றிருந்தனர்.
4)பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தேர்தலில் வாக்களிக்க வேண்டும் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் எம்மிடம் உள்ள ஒரே ஒரு ஜனநாய ஆயுதம் வாக்கு
பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் அவர்கள் எமக்கு என்ன தருவார்கள் தென்னிலங்கை வேட்பாளர்.
வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வந்து பேசுகிறார்கள் என்றால் தமிழ் பொது வேட்பாளர் விடயம் எந்தளவிற்கு சென்றுள்ளது.
தற்போது கூட இணையத்தள செய்தி ஒன்றினை பார்த்தேன் தமிழ் கட்டமைப்பை ஜனாதிபதி சந்திக்க விருப்பம் தெரிவிப்பதாக
கடந்த 2ம் திகதி மாவை அவர்களை சந்தித்த ஜனாதிபதி பொலிஸ் அதிகாரம் இல்லாத 13ஐ வலியுறுத்தினார்.
எமது கட்சி சமஸ்டி கட்சி சமஸ்டியை விட்டு சாதாரண விடயங்களுக்காக பேசிக்கொண்டிருப்பது. மக்களை ஏமாற்றுகின்றோம்
நாளை நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வலியுறுத்துவேன்



