ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்று செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டாா். இதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத் தலைவா் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
இந்நிலையில், ஹமாஸ் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அந்த அமைப்பின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கட்டாரில் பல ஆண்டுகளாக ஹனீயே தஞ்சம் அடைந்ததைப் போல் அல்லாமல் காஸாவிலேயே சின்வா் வசித்து வந்தாா். பொதுவெளிகளில் அதிகம் தோன்றாவிட்டாலும் ஹமாஸ் அமைப்பின் நிா்வாகத்தின் மீது தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருபவராக இவா் அறியப்படுகிறாா்.
ஆனால், இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து இவா் பொதுவெளியில் தோன்றாதது குறிப்பிடத்தக்கது.
Related Posts
இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உட்பட 37 சந்தேக நபர்களுக்கு எதிராக துருக்கி பிடியாணை பிறப்பித்துள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37 சந்தேக நபர்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல்...
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி!
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, 'இந்த பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான்...
மத வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடிப்பு!
இந்தோனேசியாவில் நேற்று (07) மத வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசிய தலைநகர்...
அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வொட்சன் காலமானார்!
DNA கட்டமைப்பை கண்டறிவதில் முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்க விஞ்ஞானியும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வொட்சன் (James Watson) காலமானார். அவர் 97 வயதில் உயிரிழந்துள்ளார். 20...
இந்திய பிரதமரை புகழ்ந்த அமெரிக்க ஜனாதிபதி!
மேற்கத்தேய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு அபராதமாக...
விமானம் தாங்கி கப்பலை களமிறக்கிய சீனா!
சீனாவின் மிகவும் திறமையான விமானம் தாங்கி கப்பலான புஜியன் இன்று (07) உத்தியோகபூர்வமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவை முந்திக்கொள்ளும் முயற்சியில் சீனாவிற்கு...
புகழ்பெற்ற நடிகை பவுலின் காலின்ஸ் காலமானார்!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற, புத்திசாலி ‘ஷெர்லி வேலண்டைன்’ நடிகை பவுலின் காலின்ஸ் (Pauline Collins) காலமானார். அவருக்கு இதைவிட அமைதியான பிரியாவிடை கிடைத்திருக்க முடியாது எனத் தெரிவித்து நடிகையின்...
கசகஸ்தான் ஆபிரகாம் ஒப்பந்தங்களில் இணையும்!
'இஸ்ரேலுக்கும், இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்காக கசகஸ்தான் ஆபிரகாம் ஒப்பந்தங்களில் இணையும்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...
எலான் மஸ்கிற்கு 1 ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்க ஒப்புதல்!
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க்கு 1 ட்ரில்லியன் டொலர் (ரூ.88 இலட்சம் கோடி ரூபாய்) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா...
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை!
ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்ததுடன், ஜி20 தலைமைப் பதவியில்...









