• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார், இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது – EPDP பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன்.!

Thinakaran by Thinakaran
February 3, 2024
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மிக விரைவில் இலங்கை வருவார் என்றும் இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே சாத்தியமாகிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பேச்சாளர் ஐ.சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது,

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள
சாந்தன் என்று அழைக்கப்படுகின்ற தில்லையம்பலம் சுதேந்திரராசா அவர்கள் இலங்கை வருவது தொடர்பாக ஊடகங்களிலே பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

உண்மையில் அவரை இலங்கைக்கு வரவழைப்பதற்கு, அவரது பெற்றோர் எங்களுடைய கட்சியினுடைய தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை அணுகி தங்களுடைய மகனை இலங்கைக்கு அழைத்து வருவதில் உள்ள தடைகளை இனங்கண்டு, பாதுகாப்புத் தரப்பினது அனுமதிகளை பெற்றுத்தருமாறு கோரியிருந்திருக்கிறார்கள்.

உண்மையிலே எங்களுடைய கட்சியின் தலைவர் அவர்கள் தேசிய நல்லிணக்கத்தை தென்னிலங்கை தரப்புக்களுடன் வளர்த்ததன் அல்லது நட்பை வளர்த்ததன் ஊடாக அதனை சாத்தியப்படுத்தக் கூடியதான சமிக்ஞைகள் தெரிகின்றன.

சாந்தனுடைய தாயார் 77 வயதுடைய தில்லையம்பலம் மகேஸ்வரி அம்மையார் தன்னுடைய மகனை முதுமை காரணமாக இந்தியாவிற்கு சென்று பார்க்க முடியாதுள்ளதாகவும், மனிதாபிமான அடிப்படையில் தனது மகனை இலங்கைக்கு அழைத்துவர தங்களாலான உதவிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் தென்னிலங்கையில் அரசுடன் அமைச்சர் அவர்கள் தொடர்பு கொண்டதன் ஊடாக அவருடைய வருகை விரைவுபடுத்தப்பட்டிருக்கின்றது.

நாங்கள் அறிக்கை விடுவதன் ஊடாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற பலமோ அல்லது பேரம் பேசுகின்ற பலமோ தமிழர் தரப்பில் இல்லாத சூழல் இருக்கின்றது. மாறாக தேசிய நல்லிணக்கம் தான் இவ்வாறான வாய்ப்புகளை சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்திருக்கிறது.

ஆகவே கடந்த நல்லாட்சி அரசு காலத்திலே பல தமிழ் இளைஞர்கள் தமிழ் அரசியல் கைதிகளாக சிறைகளிலே நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, நல்லாட்சி அரசைக் கொண்டுவந்தவர்களும் நல்லாட்சி அரசினுடைய காவலர்களாக செயற்பட்டவர்களும் அவர்களை விடுவிப்பதிலே அல்லது அவர்களது வழக்குகளை இரத்துச்செய்து பொது மன்னிப்பு அடிப்படையில் அவர்களது பெற்றோர்களுடன் இணைப்பதிலே எவ்வளவு அக்கறை காட்டினார்கள் என்பது உலகறியும்.

ஆனால் நாங்கள் தென்னிலங்கையுடன் இருக்கின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக றாஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கிலே குற்றஞ்சாட்டப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கும் சாந்தனை இலங்கையிலுள்ள அவரது குடும்பத்துடன் இணைப்பதற்க்கான சகல விதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.- என்றார்

Tags: epdpஅதிகரித்தது!இதுஇலங்கைஊடகவேஐ.சிறரங்கேஸ்வரன்.!சாத்தியமாகிறதுசாந்தன்செய்திகள்தேசியநல்லிணக்கத்தின்பேச்சாளர்மிகயாழ்வருவார்,விரைவில்

Related Posts

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

by Mathavi
May 9, 2026
0

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு...

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். போதனா வைத்தியசாலையின் தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

by Mathavi
May 9, 2026
0

உலக செஞ்சிலுவை தினத்தை சிறப்பிக்கும் முகமாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளையினரால் இன்றைய தினம் விசேட மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்...

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

by Mathavi
May 9, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும்...

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

by Mathavi
May 9, 2026
0

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணியின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (09) காலை 10:30 மணியளவில் யாழ் கிளைத் தலைமைச் செயலகத்தில்...

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

by Mathavi
May 9, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்குமூலம் அளிக்குமாறு கபில சந்திரசேனவுக்குப் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர்...

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

by Mathavi
May 9, 2026
0

அரச திறைசேரி நிதி மோசடி மற்றும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து அரசு உடனடி மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை...

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திர விழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து...

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

by Mathavi
May 9, 2026
0

சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா...

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

by Mathavi
May 9, 2026
0

கணவருடன் சென்ற மகள் மற்றும் 10 மாதம் நிரம்பிய பேரப்பிள்ளை ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி