• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, November 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home யாழ் செய்திகள்

பயிற்சிக் கருத்தரங்குகளை தவிர்த்து, செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுங்கள் – வடக்கு மாகாண  ஆளுநர் தெரிவிப்பு!

Thinakaran by Thinakaran
February 1, 2024
in யாழ் செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் காலங்களில் பயிற்சிக் கருத்தரங்குகளைத் தவிர்த்து, இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகளைக் கொண்டு செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் செயற்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற  தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோருடன், கௌரவ ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (31.01.2024) இடம்பெற்றது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கடந்த வருடத்தில் மாத்திரம் 3187.649 (மூவாயிரத்து நூற்று எண்பத்தேழு தசம் ஆறு நான்கு ஒன்பது) மில்லியன் ரூபா செலவில் வடக்கு மாகாணத்தில் பல்வேறு வகையான பயிற்சி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார். அத்துடன் தற்போது மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில் மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் முன்மொழிவுகளை சமர்பித்தனர். 

அரச சார்பற்ற நிறுவனங்களினால் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளுக்குமான  ஒத்துழைப்பை வழங்க தமது அமைச்சுகள் தயாராக உள்ளதாக கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் கீழ்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்.

வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் செயற்பாடுகளை பட்டியல்படுத்தல் வேண்டும்.

செயற்றிட்டங்கள்,முதலீடுகளில் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகளை திட்டமிடல் வேண்டும் .

பாடசாலை இடைவிலகலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். BACK TO SCHOOL திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

பின்தங்கிய பிரதேச சபைகளுக்கு வருமானங்களை பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டங்களை முன்மொழிய வேண்டும்.

விவசாய உற்பத்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதோடு, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் ..

அத்தோடு, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு தொழிற்துறையில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.  கலந்துரையாடலின் போது வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் அமுல்படுத்த வேண்டும் எனவும்  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
IMG 20240201 WA0127

Tags: அதிகரித்தது!ஆளுநர்கருத்தரங்குகளைசெயற்பாட்டுசெய்திகள்தவிர்த்து,திட்டங்களைதெரிவிப்பு!பயிற்சிக்மாகாண முன்னெடுங்கள்யாழ்வடக்கு

Related Posts

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் பனம் விதை நடுகை!

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் பனம் விதை நடுகை!

by Thamil
November 8, 2025
0

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சமூக விஞ்ஞான ஆய்வு மையமும், சமூக ஆர்வலர் ஒன்றியமும் இணைந்து பனம் விதை நடுகை இன்றைய தினம் (08) வடமராட்சி...

மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்!

மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்!

by Thamil
November 8, 2025
0

'நல்லதொரு புரிந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்லவேண்டும்' என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் இன்று...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சூத்திரதாரிகள் யாழில் கைது!

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சூத்திரதாரிகள் யாழில் கைது!

by Thamil
November 8, 2025
0

கொழும்பில் துப்பாக்கிச் சூட்டினை நடத்திய மூவர் இன்றைய தினம் (08) யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று...

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு மிக விரைவில் நடவடிக்கை!

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு மிக விரைவில் நடவடிக்கை!

by Thamil
November 8, 2025
0

'வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத கடற்தொழில்கள் மீது மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்டும்' என்று தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர்...

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் அதிரடி நடவடிக்கை!

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் அதிரடி நடவடிக்கை!

by Thamil
November 8, 2025
0

வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் சட்டவிரோத செயற்பாடுகளை தமது பகுதியில் முற்றாக அழித்தொழிப்பது எனும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று...

சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற வாராந்த கலைநிகழ்வுகள்..!

சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற வாராந்த கலைநிகழ்வுகள்..!

by Thamil
November 7, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில்...

யாழில் 21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு!

யாழில் 21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு!

by Thamil
November 7, 2025
0

யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் இன்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா...

கோர விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

கோர விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
November 7, 2025
0

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்....

சேர்.பொன். இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் 2 ஆவது பன்னாட்டு ஆய்வு மாநாடு.!

சேர்.பொன். இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் 2 ஆவது பன்னாட்டு ஆய்வு மாநாடு.!

by Mathavi
November 7, 2025
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சேர்.பொன். இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இரண்டாவது பன்னாட்டு ஆய்வு மாநாடு இந்த மாதம் 14, 15 ஆம் திகதிகளில் யாழ். திருவள்ளுவர்...

யாழ். மாவட்டத்தில் காணி அற்றோருக்கு அரச காணிகளை பகிர்ந்தளிக்குக.!

யாழ். மாவட்டத்தில் காணி அற்றோருக்கு அரச காணிகளை பகிர்ந்தளிக்குக.!

by Mathavi
November 7, 2025
0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் காணி இன்றி வாழும் மக்களுக்கு காணிகளை பிரதேச செயலகங்கள் வழங்கவேண்டும் என்று பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி