வெளியில் சென்று வீடு திரும்பிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி-தாய் உயிரற்ற உடலாக..!

துவைத்த துணிகளை வெயிலில் உலர வைப்பதற்கு வீட்டின் கொங்கிரீட் கூரையில் ஏற முற்பட்ட பெண் ஒருவர் தவறி கீழே வீழ்ந்த உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணாவார்.

இவர் வீட்டில் யாரும் இல்லாத போது துவைத்த துணிகளை வெயிலில் உலரவைப்பதற்காக வீட்டின் கொங்கிரீட் கூரையில் ஏற முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரது மகன் அழகு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லும் நிலையில் சம்பவ தினத்தன்று வழமைபோல வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மகனின் மனைவி பிள்ளைகளை மேலதிக வகுப்புக்காக அழைத்துச் சென்று மீண்டும் வீடு திரும்பிய போது அவர் கீழே வீழ்ந்து கிடப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து மருமகள் ,பிரதேசவாசிகளின் உதவியுடன் காயமடைந்தவரை மாத்தறை தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.