யாழில் சற்றுமுன் நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து!

0
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் நாவலர் வீதியால் வருகை தந்த நகைக்கடை உரிமையாளரின் மனைவியின் வாகனம் இலுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்டது .
இந்நிலையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியூடாக புன்னாலைக் கட்டுவன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இலுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் கால்கள் முறிவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த நகைக்கடை உரிமையாளரின் மனைவி சந்தியை கவனிக்காது வாகனத்தை நேராக பயணிக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம் பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.