மன்னார் பள்ளிமுனை கடலில் வல்லம் தாண்டு மீனவர் பலி!

0

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து இன்று திங்கட்கிழமை (13.05.2024) மாலை  வல்லத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் தண்டதில் கடலில் விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் (வயது-62) என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளடங்களாக மேலும் சில மீனவர்கள் வல்லம் ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.இதன் போது  இன்று   மாலை 4 மணியளவில் திடீரென கடும் காற்று மற்றும் மழை பெய்துள்ளது.

இதன் போது குறித்த மீனவர்கள் சென்ற வல்லம் (படகு) கடலில் மூழ்கியது.  .இதன் போது ஏனையவர்கள் தப்பிய போதும் குறித்த குடும்பஸ்தரான மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.