நுவரெலியாவில் வீடு உடைத்து உள்நுளைந்தவரிற்கு நேர்ந்த கதி

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் இரண்டாவது ஒழுங்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) இரவு தனி வீடு ஒன்றினை உடைத்து உள்நுழைந்த குற்றவாளி தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியை இன்று புதன்கிழமை (20) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த குற்றவாளி வீட்டின் பின்புற நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து வீட்டில் எந்தவிதமான பொருள்களையும் எடுத்துச் செல்லாமல் மீண்டும் அதே நுழைவாயில் ஊடாக வெளியேறும் காட்சி குறித்த வீட்டில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ டீவி காணொளியில் பதிவாகிய நிலையில் இதன் மூலம் அடையாளம் காணப்பட்டதன் அடிப்படையில் பிரதான குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றவாளி நுவரெலியாவில் வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவரா என்ற கோணத்திலும் நுவரெலியா தடயவியல் பொலிஸாரோடு இணைந்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG 20240320 WA0063
IMG 20240320 WA0061 IMG 20240320 WA0062

செய்தியாளர் செ.திவாகரன்

Comments are closed.