சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் மாயம்..!

ஹட்டன் வழியாக சிவனொளி பாதமலைக்கு சென்ற 80 வயது மூதாட்டி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மெல்சிரிபுர பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. மெல்சிரிபுர பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய மூதாட்டி ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இவர் கடந்த 23 ஆம் திகதி மெல்சிரிபுர பிரதேசத்திலிருந்து 53 பேர் கொண்ட யாத்திரை செல்லும் குழுவுடன் ஹட்டன் வழியாக சிவனொளி பாதமலைக்கு சென்றுள்ளார்.

இந்த மூதாட்டி பக்தர்கள் குழுவுடன் சிவனொளி பாதமலையின் உச்சி வரை பயணித்துள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் அங்கு வருகை தந்திருந்தமையால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து காணாமல்போன மூதாட்டியின் உறவினர்கள் மெல்சிரிபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

காணாமல்போன மூதாட்டி தொடர்பில் தகவல் கிடைத்தால் 076-5484222 , 076-8933096 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு அவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். காணாமல்போனவரை தேடும் பணி தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி தெரிவிக்கையில் , காணாமல்போனவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

Comments are closed.