உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு!

0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான
விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று  கரைச்சி மேலதிக பிரதேச செயலாளர்
தலைமையில் திங்கள் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சுற்றுச்சூழல், உலக மற்றும் உள்ளுர் நீர் வளங்கள்,நீருக்கான
நெருக்கடிகள்,பொது மக்கள் எதி்ர்கொள்ளும் சவால்கள், நீர் பயன்பாடு, நீர்
வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்
கருத்தமர்வு இடம்பெற்றது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மாணவர்கள், சமூக
அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச கள உத்தியோத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு
வருகின்ற கருத்தமர்வே கரைச்சியிலும் இடம்பெற்றது. இக் கருத்தமர்வினை
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் எந்திரி எஸ். சாரங்கன் அவர்களும், அதன் உத்தியோகத்தர் மு. தமிழ்ச்செல்வன்
அவர்களும் நடாத்திருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.