இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி மரணம்..!

இலங்கை கடற்படையின் ஏழாவது (07வது) தளபதி அட்மிரல் பசில் குணசேகர இன்று (17 பெப்ரவரி 2024) காலமானார்.

1951 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி இலங்கை கடற்படையில் சேர்ந்தார். 1973 ஜூன் 01 முதல் 1979 மே 31 வரை இலங்கை கடற்படையின் 07 வது தளபதியாக பதவி வகித்தார்.

மறைந்த அட்மிரல் பசில் குணசேகர 1929 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது பூதவுடல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 18 ஆம் திகதி வரை கொழும்பு 06 அனுலா வீதி இலக்கம் 50/06 இல் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடற்படை மரபுகளுக்கு அமைவாக இறுதிக்கிரியைகள் மரியாதையுடன் நடைபெற்று 18 பெப்ரவரி 2024 அன்று பொரளை பொது மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்.

Comments are closed.