நிக்கவெரட்டிய – அம்பன்பொல வீதியில் பனாதரகம பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அம்பன்பொல, பனாதரகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
லொறி ஒன்று வீதியோரத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த நபர் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.