யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் அண்மைய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு – நெடுங்கேணி, கரடிப்பிலவு ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 56 குடும்பங்களுக்கு ரூபா 280,000 பெறுமதியான அத்தியவசியமான உலருணவு பொருட்கள் கரடிப்பிலவு முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது.
நேற்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் அறநெறிப் பாடசாலையின் இணைப்பாளர் த.ஜீவா தலைமையில் இடம்பெற்ற இவ் உதவி வழங்கும் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.