வடமராட்சி பருத்தித்துறை கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கொட்டடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக் காணியினை இன்று சனிக்கிழமை துப்பரவு செய்யும் போது அக் காணிக்குள் இருந்த பாவனையில்லாத கிணற்றிலிருந்து 11 கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் குழுவினரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.