ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள டிக்கோயா போடைஸ் தோட்ட போடைஸ் பிரிவில் தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தை உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி இரத்நாயக தெரிவித்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை போடைஸ் தோட்ட போடைஸ் பிரிவில் உள்ள வன பகுதியில் உடல் மட்டும் உள்ளதை கண்ட தோட்ட மக்கள் இது குறித்து ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் இருக்கும் சிறுத்தை உடலை மீட்டு பரிசோதனை மேற்கொள்ள பேராதனை மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு உள்ளது.
சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுத்தையே வலையிட்டு பிடிக்கப்பட்டு இவ்வாறு முண்டமாக மீட்கப்பட்டுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.